எனது வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 25, 2013

வஞ்சனைகள்

இவ்வுலகில்
வியாபித்துள்ளவை எல்லாம்
வஞ்சனை வதனங்கள்தான்!

கஞ்சிக்கே வழியின்றி
தஞ்சம் புக இடமின்றி
நெஞ்சு சுமை கொண்ட
கூட்டம் ஒரு புறம்;!

பண திமிரில்
பொல்லாத வார்த்தைகளை
விஷமாய் கக்கும்
கூட்டம் மறுபுறம்!

ஏழைகளுக்கு உதவி
நாளைய சமூகத்தை
முன்னேற்றியதாக
பெயர் சொல்ல யார் உண்டு?

ஏழைகளை ஓலைப் பாயாக்கி
கால் துடைப்பமாக பார்க்கும்
'பெரிய மனிதர்களுக்கே'
நல்ல பேர் உண்டு!

என்று மாறும் நம்
சமூகம்
என்று ஒழியும் இந்த
ஏற்ற தாழ்வு

மாறவேண்டும் மனிதன்
மனிதநேயம் உள்ளவனாய்
மாறவேண்டும் இவ்வுலகம்
மனிதபிமானம் உள்ளதாய்!!!

Wednesday, December 4, 2013

விஷம்

நாட்களும் நமக்கு
பாடம் நடத்தத் தவறவில்லை..
அவற்றை நாம் தான்
அனுபவமாக்க முயலவில்லை!

நம்பினோர் எல்லாமே
நமக்கெதிரியாய் மாறுகின்றனர்..
பாசத்தைக்கூட
விஷ வேஷமாய் தூவுகின்றனர்!

கொடுபாவிகள் உணரவில்லை
அதை
நானறிவேன் என்று!

நன்றி கெட்டவரை
நண்பராக்கினாலும்
நயவஞ்சகம் கொண்டு
நல்லவன்போல் நடிப்பவரை
நண்பனாக்காதே!

பாம்புக்கு கூட
பல்லில் மட்டும்தான் விஷம்
நயவஞ்சகம் கொண்ட மனிதனுக்கோ
உடலெங்கும் விஷமடி!

நம்பி விடாதே
இந்த மனிதப் பாம்புகளை..
விஷத்தையே உன் மீது ஊற்றி
விஷப் பிணமாக்கி விடுவார்கள் உன்னை!!!

தரிசனம்


அன்பானவனே..
அகலாத பிரியமுடன் ஒரு கடிதம்
அழுகையுடன் வடிகின்றேன்!

அன்பின் ஆழத்தை
உன்னாலே நானும் கண்டேன்
உன் மீது மட்டுமே
நானும் அன்பு கொண்டேன்!

என் நினைவை மட்டும் - உன்
நினைவகத்தில்
நிலை நிறுத்திக்கொள்;ளும்
உனக்கே இம்மடல்!

என்ன செய்கிறாய்?
எப்போது வருவாய்?
என்றெல்லாம் என்
மனசு இடைவிடாமல்
கேள்வி கேட்கின்றது!

என்ன சொல்லச் சொல்கிறாய்
என் மனதிற்கு?

சீக்கிரமாக பதில் தா
மடலாக அல்ல
உன் தரிசனத்தால்!

அமுத விஷம்

'என்னை உனக்குப் பிடிக்குமா?'
என்று கேட்டாயே ஒரு கேள்வி
அமுத விஷம் போல!

உன்னை ஏசுவதற்கு
வார்த்தைகள்
ஏராளம் உண்டு..
ஆனால்
ஏசுவதற்கான வலிமை
என் மனதிற்கில்லை!

வலிக்கிறது!
இன்னுமா புரியவில்லை
உன் மேல் கொண்ட
பாசத்தை!

மனதை கல்லாக்கிக்கொண்டு
மரண வேதனையையும்
தாங்கிய வண்ணம்
ஒரே ஒரு வார்த்தை
உன்னை ஏசவேண்டும்!

'வார்த்தைகளில் விஷத்தைக்
கக்கும் நீ
எந்த இனப் பாம்படி?'

காலத்தின் கோலத்தால்
என்னையும் கவிஞனாக்கினாய்
இன்று..
உன் ஒரே வார்த்தையால்
என் இதயத்தை
சிதறிய கண்;ணாடியாக்கினாய்!!!

நானறிவேன்

என்னருகே எவர் வந்தாலும்
உன் முகம்
வாடுவதை நானறிவேன்!

மனதுக்குள் அவர்களை
திட்டித் தீர்க்கிறாய்
என்பதையும் நானறிவேன்!

உன்
தூய்மையான பாசத்தையும்
நானறிவேன்!

உன்னைத் தவிர
என் பாசத்தை - நான்
எவரிடமும் பகிரக்கூடாதென்று
உன் உள் மனது
மெல்ல உச்சரிப்பதையும்
நானறிவேன்!

இவையனைத்தையும்
அறிந்த நான்...
மற்றவர்கள் அனைவரும்
சந்தர்ப்பவாதிகள்
என்பதை மட்டும்
அறியேன் என்று நினைத்தாயா?

அனைத்தும் நான் அறிவேன்!
அவர்களின் பாசம்
பொய்யென்று மட்டுமல்ல
உரிமையோடு நீ கொண்டுள்ள
பாசம் தூய்மையானது
என்பதையும் கூட!!!

Wednesday, November 27, 2013

உயிரானவள்

சொந்தங்கள் பலவும் கடந்த – எனக்கு
சொர்க்கமே செல்லாமல்
சொர்க்க இன்பத்தை தந்தவள் நீ!

அன்னையைப் போற்றும் இவ்வுலகம்
பிள்ளையின் பெருமையை
சொல்ல மறந்ததேனோ?

நீயின்றி கிடைத்ததோ தாய்மை,
உன்னால் தானே எனக்கு பெருமை
அன்னை என்ற அன்பு வார்த்தைக்கு
என்னை உரியவளாக்கிய நீ
என் இளவரசியே!

மலடி எனும் மரணச் சொல்லை
நான்  செவிமடுக்கவில்யென்றால் - அது
உன்னால்தானே!

கஷ்டங்கள் வந்தபோதிலும்
உன் கலகலப்பான சிரிப்பில்;
மறந்தே போனேன் அனைத்தையும்!

சகுனம் என்ற பெயரில்
கொடூர சொல்லால் மரண வேதனை
தரும் நம் சமுகம்
பிள்ளையற்றவளுக்கு பெரிய
சகுனமல்லவா பார்க்கிறது?

அந்த
கொடிய சொல்லைக் கேட்காமல்
குதூகலத்தில்
என் உள்ளத்தைக் குளிர வைத்த
நீ...
என் சிரேஷ்ட
புதல்வி மட்டுமல்ல
என் உயிரானவளும் கூட!!!

கானல் நீர்

பாசம் வைத்த
உறவுகள் எல்லாம்
என் கண்ணில்
கானல் நீராக!

உறவு என்ற வார்த்தைக்கு
உயிர்கொடு
உண்மை அன்பே – அந்த
உறவுக்காகவே
உயிரையும் கொடு!

பொய்யான பாசங்கள்
தடயமின்றி
புதைந்து போகும்..
உண்மை நேசம் ஒன்றே
விலைமதிக்க முடியாத
புதையலாகும்!

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
அன்பை நிரப்பிடு
உன் உயிர் கூட்டிற்குள்!

மனிதப் பிறவி ஒன்றுதான்..
மீண்டும் பிறப்பது இல்லைத்தான்..

வஞ்சனையை விட்டெறிந்து
நேர்மையை நிலை நிறுத்து...
இறந்த பின்னும் வாழுமே
அன்பெனும் அழியா சொத்து!!!